Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி

இன்று மே பதினேழு இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அலைசெய்திகள் மே பதினேழு இயக்கத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது,

திருமுருகன் அவர்கள் கல்லூரி மாணவர்கள் கூடன்குளத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் போது அவர்களை பார்க்க அங்கு சென்றவேளை காவல்துறைக்கும் அவருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதை அடுத்து காவல்துறை அவரை தாக்கியதாகவும் பின்னர் பொய் வழக்கு சுமத்தப்பட்டு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக மாணவர்களை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றே வழக்கு பதிவு செய்ததுடன் பிணையில் எடுக்க முடியாதவாறு வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்று அவர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் மீண்டும் தமிழக அரசு தனது அராஜகத்தை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

[vuukle-powerbar-top]

Recent Post