Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விளையாடிக் கொண்டிருக்கும் போது விபரீதம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன்


கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் உயிருக்கு போராட்டம்.விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்ப்பட்ட விபரீதத்தால் பெரும் பரபரப்பு. 

கிருஷ்ணகிரி அருகே உள்ள தளி என்ற இடத்தில் வீட்டின் அருகேவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குணா அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.தோண்டி சில நாட்களே ஆனா அந்த கிணறு சரிவர மூடப்படமால் இருப்பதே இந்த விபத்திற்கு காரணம் என அறியப்படுகிறது. 

மேலும் தீயணைப்பு வீரர்கள் சிறுவன் குணாவை உயிருடன் மீட்க தீவிரமாக ஈடுபட்டுள்ளனார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post