Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மரணம்

இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா (83) உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாட்டு சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ள அவர், வெளியுறவுத் துறை செயலாளரளாகவும் பணியாற்றி உள்ளார். 

பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, அவரது முதன்மைச் செயலாளராக அவர் இருந்தார். பின்னர், தேசிய பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கார்கில் போரின் போது, பிரதமர் வாஜ்பாய்க்கு பெரிதும் உதவியாக இவர் செயல்பட்டார். 

பிரஜேஷ் மிஸ்ராவின் மறைவுக்கு குடியரசு துனைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்பட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post