Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல்வர் பதவியை பறிகொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் - நஜீப் ஏ மஜீத் பதவியேற்றார்


கிழக்கு மாகாண முதல்வராக நஜீப் ஏ மஜீத் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.

அலரி மாளிகையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்ததை அடுத்தே, நஜீப் ஏ மஜீத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதல்வராக நியமித்துள்ளது.

பங்காளிக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடனேயே மஜீத் கிழக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளதாக இலங்கை அதிபர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post