Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி பிரச்சனை. தமிழகமும் கர்நாடகமும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் - வீரப்பமொய்லி


மங்களூர் அரசு விருந்தினர் மாளிகையில் நடுவண் அமைச்சர்  வீரப்பமொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக, தமிழக அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினையில் பிரதமர் மன்மோகன்சிங் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவது சரியல்ல.

காவிரி பிரச்சினை தொடர்பாக நானும் பிரதமருடன் பேசியுள்ளேன். பிரதமர் கூறியுள்ள முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும்போது, கர்நாடக அரசும் கோர்ட்டில் தனது வாதத்தின் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி என்பது மதவாத கட்சி அல்ல. எங்கள் கட்சியில் சாதி அடிப்படையில் யாருக்கும் கட்சி பதவி கொடுக்கப்படுவது இல்லை. தற்போது கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவரை மாற்றும் பேச்சுகே இடமில்லை. ஆனால் சிலர், தலைவர் மாற்றம் குறித்து அவப்பிரசாரம் செய்து வருகிறார்கள். அது சரியல்ல. இத்துடன் அந்த பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அமலுக்கு வந்தால் விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடைவார்கள். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது சரியல்ல. தற்போது அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தேர்தலின் போது இதற்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர். தற்போது அவர்கள் எதிர்த்து பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நேரடி அன்னிய முதலீட்டை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால், அவர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை. பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா காங்கிரஸ் கட்சிக்கு வந்தால், நாங்கள் அவரை வரவேற்பதாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


[vuukle-powerbar-top]

Recent Post