Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆயிரக்கணக்கான படகுகளுடன் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் (படங்கள்)





கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பக் கூடாது,  அணு உலைகளை மூட வேண்டும் , கூடங்களம் மக்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட காவல் துறை அடுக்குமுறையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கடலோர மீனவ மக்கள் ஆயிரக்கணக்கான விசைப்  படகுகளில் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.  சுமார் 2000 படகுகளில் மீனவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த கப்பல் போக்குவரத்தையும் அவர்கள் அனுமதிக்க மறுத்தனர். கடலோர காவல் படையையும் சுற்றி வளைத்தனர் போராட்டக் காரார்கள். இதனால் காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாமல் திணறியது . நிலமாக இருந்திருந்தால் இந்நேரம் தடியடி நடத்தி முற்றுகை போராட்டத்தை களைத்து  இருப்பார்கள் காவல்துறை . நீரில் இந்த போராட்டம் நடை பெற்றதால் , காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்தது. ஒரு நாள் முழுவதும் முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக  நடத்தி முடித்தனர் மீனவர்கள்.     






























[vuukle-powerbar-top]

Recent Post