Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் என்ன ?

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்க எதிர்ப்புக் குழு முடிவு செய்திருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நீடித்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மணலில் பாதியளவு புதைந்து போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக அப்பகுதி மக்களிடையே பேசிய அணுமின்நிலைய எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று இடிந்தகரையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

எதிர்ப்பாளர்களை இணைக்க திட்டம்கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளையும், சமுதாய அமைப்புகளையும் ஓர் அணியில் திரட்ட அணுமின் நிலைய எதிர்ப்புக் குழு திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post