Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

இன்று ஆசிரியர் தினத்தையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிறந்து ஆசிரியராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக பதவி வகித்து, ஆசிரியப் பணிக்கு பெருமை தேடித் தந்தவர் என்று முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, அவர் காட்டிய வழியில் ஆசிரியர்கள் நல்ல குறிக்கோள்களையும் சமுதாய சிந்தனைகளையும் மாணவர்களுக்கு விதைத்து கல்விப் பணியாற்ற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்வுக்காக உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுபோல், ஆளுநர் ரோசய்யா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post