Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எதிர்ப்பலைகளை அதிகம் சேகரிக்கும் அமெரிக்கா

முகமது நபிகளைப் பற்றி தவறாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க திரைப்படம் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளது.

உச்சகட்டமாக லிபியாவின் பென்காசி நகரில் அமெரிக்க தூதர் உள்பட 4 அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரபு நாடுகளுக்கான அமெரிக்க தூதர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

குறிப்பாக லிபியா, டுனிசியா, ஏமன், சூடான் ஆகிய நான்கு நாடுகளுக்கான அமெரிக்க தூதர்களுன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது அதிபர் ஒபாமா , வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் இருக்கும் அமெரிக்க தூரதரக அதிகாரிகள் மற்றும் சாமான்ய அமெரிக்கர்களின் பாதுகாப்பு குறித்து தாம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை தமது அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒபாமா தெரிவித்தார். 

தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொண்ட போது கூட வெளிநாடு வாழ் அமெரிக்கர்களின் பாதுகாப்பு குறித்து தாம் தீவிரமாக சிந்தித்து வந்ததாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் அதிபர் ஒபாமா.
[vuukle-powerbar-top]

Recent Post