Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை கடற்படையின் தளபதியாகிறார் றியர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே

 
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க வரும் 26ம் நாளுடன் ஓய்வு பெறவுள்ளார்.

அவருக்கு இன்று இலங்கை அதிபர் அட்மிரலாக பதவிஉயர்வு அளித்துள்ளார்.

இந்தநிலையில் அடுத்த கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் கொலம்பகேயை நியமிக்க இலங்கை அதிபர் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவர் தற்போது கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக பதவி வகிக்கிறார்.

றியர் அட்மிரல் துசித வீரசேகர, றியர் அட்மிரல் தமயந்த ஜெயநாத் தர்மசிறிவர்த்தன, றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரும் இலங்கை கடற்படைத் தளபதி பதவிக்கான போட்டியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post