Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகமது நபியை தவறாக சித்தரித்து வெளியிட்ட பிரான்ஸ் வார இதழ்

முகமது நபியை தவறாக சித்தரித்து பிரான்ஸ் வார இதழ் ஒன்றில் கார்டூன் வெளியானதை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மட்டுமல்லாது 20 நாடுகளின் தூதரகங்களை இன்று மூட அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக புதுச்சேரி துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post