Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை படையினருக்கு பயிற்சியளிக்கும் விவகாரம் - இந்திய நாடாளுமன்றத்தில் குழப்பம்


தமிழ்நாட்டில் இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று திமுக , அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் குழுப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் சபாநாயகர் ஆசனத்தை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டு, இலங்கைப் படையினருக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து, குரல் எழுப்பினர்.

"பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று எழுப்பட்ட அட்டைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

அதேவேளை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் திருமாவளவனும், ஒரு அட்டையை ஏந்தியபடி, எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜை நோக்கி முழக்கம் எழுப்பினார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சாஞ்சிக்கு வருமாறு சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், , "கொலைக் குற்றவாளியை வரவேற்கக் கூடாது' என, எழுதப்பட்ட அட்டையை சுஸ்மாவிடம் காட்டியபடி, திருமாவளவன் குரல் எழுப்பினர்.

அதேவேளை, அதிமுக உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கைப் படையினரை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இதனால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது, திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தபோதும், அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனால் குழப்பநிலை உருவாகி, மீண்டும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post