Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் நாட்டை சீர்குலைக்க சில பிரிவினைவாதிகள் முயற்சி – கோத்த

இலங்கையில் நீண்டகாலமாக நடந்து வந்த ஆயுத போராட்டத்தை நாம் முடக்கி விடுதலை புலிகளை அழித்தொழித்து விட்ட இந்த நிலையில் எமது மக்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒற்றுமையுடனும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகிறனர் இந்த நிலையில்.

நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்த பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பயங்காவரதம் நீடித்த காலத்தில் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டது.
இதே நிலைமையை மீளவும் ஏற்படுத்த உள்நாட்டு வெளிநாட்டு சதிகாரர்கள் முயற்சிக்கின்றனர்.
உயிர்த் தியாகம் மூலம்  படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் ஓரிரு ஆண்டுகளில் பறிபோகக் கூடாது.
படைவீரர்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை நாட்டு மக்களும், அரசாங்கமும் பாராட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற இலங்கைப் படைவீரர் பாராட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post