Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ள புதிய தலைமுறை நிறுவனர் பாரிவேந்தர்


தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ள புதிய தலைமுறை நிறுவனர் பாரிவேந்தர்.  

 ஐ.ஜே.கே கட்சி தலைவர் மற்றும் புதிய தலைமுறை தொலைக் காட்சி நிறுவனரான பாரிவேந்தர், 1000 தலித் ஜோடிகள் இலவச திருமண திட்டத்தை முன்மொழிந்து அதன்படி தமிழகம் முழுவதும் சென்று நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவுண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தில் நடந்த 2 திருமணங்களுக்கு வருகை தந்தார். 

திருமணம் நடத்திவைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசியவர், தனி ஈழம் சாத்தியமல்ல. தனி ஈழத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எங்களது கட்சியுடையதல்ல. தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவு கட்சிகள் யாரோ ஒருவரை தலைவராக கொண்டு ஒன்னரை லட்சம் மக்களை பலி கொடுத்துள்ளார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் தாக்கப்படுவது சகஜம். மீனவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அணுஉலை நாட்டுக்கு தேவை. அணுமின் நிலையத்துக்கு ஆதரவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அணு உலைக்கு எதிராக உதயகுமார் உள்ளார். அவர் கைது செய்யப்படவேண்டும். வரும் நாடாளமன்ற தேர்தலில் நாங்கள் பி.ஜே.பியுடன் தான் கூட்டணி வைக்க போகிறோம். ஜனநாயகம் போற்றும் கட்சி பி.ஜே.பி அதனால் அந்த கட்சியில் தலைமை பதவிக்கு சண்டை நடக்கின்றன’’ என கூறினார்.

இப்படியான தமிழர் விரோத கருத்தை ஒரு தொலைக்காட்சி  நிறுவனர் வெளிப்படுத்தியதை  அடுத்து தமிழ் உணர்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய தலைமுறை தொலைகாட்சியை  தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலும் மக்கள்  ரசித்து பார்கின்றபடியால் , தமிழர் விரோத கொள்கையை அதன் நிறுவனர்  எடுத்திருப்பது கவலை அளிக்கிறது என தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர். 

  
[vuukle-powerbar-top]

Recent Post