Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தியதால் வைகோ சாலையில் படுத்து உறங்கினார்


மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தியதால் வைகோ சாலையில் படுத்து உறங்கினார்! 

மத்திய பிரதேசதுக்கு 21 ஆம் தேதி வருகைபுரியும் இலங்கை ராஷ்ட்ரபதி ராஜபக்சேயின் வருகையை எதிர்க்கும்  நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் இருந்து சாலைவழியாக புறப்பட்ட வைகோ மற்றும் அவரது மதிமுக கட்சி தொண்டர்களும், சிங்க்வாரா பகுதியில் வந்து சேர்ந்தபோது போலீசார் அனுமதி மறுக்க பட்டதை எதிர்த்து "தர்ணா" போராட்டம் தொடங்கினார்..

நேற்று மாலை 3.30 மணிக்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, வைகோ-வும் அவரது ஆதரவாளர்களும், நாக்பூர்-போபால் நெடுஞ்சாலையில் அமர்ந்து விட்டார்... அங்கு மிகபெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது..வைகோ-வுடன் வந்த 27 பேருந்துகளும்  சாலையினை மறித்து நின்றுகொண்டு இருக்கிறது..அவர்களது வாகன அணிவகுப்பில் ஒரு வாகனம் நிறைய உணவு பொருட்களும் இரு வாகனங்களில்   அவசர சிகிச்சை  வசதியுள்ள மருத்துவ பிரிவும் உள்ளது.. 

எப்படியாவது சாஞ்சி செல்வதில் திரு.வைகோ அவர்கள் உறுதியாக இருக்கிறார், அவரது கட்சி தலைவர்களோடு அதற்கான செயல்முறை குறித்து நெடு நேரம் விவாதித்தார்.. இதனிடையே வைகோ அவர்களின் போராட்டத்தை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் உஷார்படுத்த பட்டுள்ளனர்.. மாவட்ட நிர்வாகம்  மற்றும் போலீசாரின் பேச்சு வார்த்தை முயற்சி திரு.வைகோ-விடம் எடுபடவில்லை .

இதற்கிடையே, மொழி பிரச்சனை வேறு..வைகோவுக்கும் மற்றும் தமிழக தலைவர்களுக்கும் அந்த அதிகாரிகள் பேசும் மொழி புரியவில்லை... இதனிடையே, மாநில நிர்வாக, எப்படியாவது வைகோ அவர்களை சான்சிக்கு 21 ஆம் தேதி வரை வராமல் தடுக்க தேவையான அணைத்து முயசிகளையும் செய்கிறது.... "மத்திய பிரதேசத்தின், எல்லா வியுகங்களையும் உடைத்தெறிந்து சான்சிக்கு சென்று கருப்ப கோடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியே தீருவதென்று திரு.வைகோ உறுதியாக உள்ளார்"



[vuukle-powerbar-top]

Recent Post