Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மக்களால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உதயகுமார்

இடிந்தகரைக்கு வருகைதந்த உதயகுமார் மக்களிடம் உணர்ச்சி பூர்வமாக் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரால் அடக்க முடியாத அளவிற்கு கண்ணீர் சொரிய அழுதார்.

அதை பார்த்த மக்கள் பெரும் சத்தங்களுடன் அழுதனர். பின்னர் மக்கள் அவரை சுற்றி அவரை கைது பண்ண விடமாட்டோம் எனகூறி அவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

பின்னர் மக்களிடம் எமது செய்தியாளர் கேட்டபோது

"நாங்கள் அவரை இழக்க விடமாட்டோம், இப்போது அரசு நன்றாக பேசும் அவரை கைது செய்ததன் பின்னர் அவரை எங்கு கொண்டு செல்வார்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது, ஆகவே நாங்கள் அவரை கைது செய்ய விடமாட்டோம், அவ்வாறு அவரை கைது செய்தால் எங்களையும் இந்த அரசு கைது செய்யட்டும்" என அவர்கள் கூறினார்கள்.

தற்போது சிறிது பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post