Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை எதிர்ப்பு போராட்டங்களுக்கு விடுதலைப் புலிகளே காரணமாம் – கெஹலியவின் கண்டுபிடிப்பு


தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இருக்கக் கூடும் என்று இலங்கை அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கக் கூடும்.

அவர்கள் உலகம் முழுவதிலும் செயற்பாட்டு நிலையில் இருக்கிறார்கள்.

நிலைமைகள் பாதுகாப்பானதாக இருந்தால், இலங்கை அரசாங்கத்தின் பயண ஆலோசனையை மீளாய்வு செய்ய முடியும்.

எம்மால் அதை விலக்கிக் கொள்வது குறித்து ஆராய முடியும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post