Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரியலூரில் இலஞ்சம் வாங்கியதாக எழுத்தர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுத்தர் கைது செய்யப்பட்டார். 

தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தார். 

நேற்று தாலுக்கா அலுவலகம் வந்த ராமஜெயம் வாரிசு சான்றிதழ் குறித்து எழுத்தர் தெய்வசிகாமணியிடம் விசாரித்துள்ளார். அப்போது வாரிசு சான்றிதழில் தாசில்தாரிடம் கையெழுத்து வாங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து ராமஜெயம் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தெய்வசிகாமணியை கையும், களவுமாக பிடித்தனர். 

மேலும், தாலுக்கா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post