Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கூகிளின் புதிய காருக்கு கலிபோர்னியாவில் அனுமதி!

ஓட்டுநர் இனிமேல் தேவையில்லை!
ஓட்டுநர் இல்லாமல் தானியங்கியாக ஓடும் கூகிளின் புதிய காருக்கு கலிபோர்னியா மாகாண ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் தற்போது சோதனை ஓட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முதல் ஆறு வருடத்திற்கு பிறகு, இந்த தானியங்கி கார்கள் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வரும். கலிபோர்னியாவின் சாலைகள் அனைத்தும் இந்த காரில் ஏற்கனவே துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தை தடுக்கும் வகையில் அதிநவீன உணர் தொழில்நுட்பங்கள் (சென்சார்) உள்ளன. எனவே, இந்த காரில் பயமின்றி பயணம் செய்யலாம். 14-வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் கூகிள் நிறுவனத்திற்கு, இது பிறந்த நாள் பரிசாகும்.


[vuukle-powerbar-top]

Recent Post