Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூடுகிறது காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம்!

பாய்ந்தோடும் காவிரி: ஈரோடு 

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார். 

காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வுகாண காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது இந்த ஆணையம் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, கூடி விவாதித்தது. இந்நிலையில் 9-ஆண்டு இடைவேளைக்குப்பிறகு, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான நதிநீர் ஆணையக்கூட்டம் இன்று நடக்கிறது. 

இக்கூட்டத்தில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தக்கோரி ஆணையத்திடம் ஜெயலலிதா வலியுறுத்த உள்ளார்.கூட்டம் முடிந்த பின்னர் இன்று இரவே சென்னை திரும்புகிறார். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து காவிரி விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post