Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

துவங்கியது காவிரி நதிநீர் ஆணைய கூட்டம்: தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தண்ணீர் வாங்கி வருவாரா? காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்!
காவிரி நதிநீர் ஆணையக்கூட்டம் டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று கூடியது. பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் துவங்கியுள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரள முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் கேரள முதல்வருக்கு பதிலாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பங்கேற்கிறார். இதில் தமிழகத்தின் சார்பில் காவிரி நதிநீரை பங்கிடுவது குறித்து தமிழகத்தின் வாதத்தினை முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைக்க உள்ளார்.

இந்நிலையில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில விவசாயிகள் சார்பாக இன்று தர்ணா போராட்டம் நடந்தது. மத்திய அரசு, கர்நாடக மாநிலத்திடம் மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டிய கர்நாடக விவசாயிகள், காவிரி ஆணைய கூட்டத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
[vuukle-powerbar-top]

Recent Post