Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிலக்கரி சுரங்க ஊழல் நடந்தது உண்மைதான்: ஒப்புக்கொள்ளும் மத்திய அரசு!


நிலக்கரி சுரங்க முறைகேடு நடந்தது உண்மைதான் என விளக்குவது போல், மத்திய அரசு திடீரென சுரங்க ஒதுக்கீடுகளை இரத்து செய்துள்ளது. செயல்படாத 58 சுரங்கங்களில் இரண்டுநிறுவனங்களின் ஒதுக்கீடுகளை மத்திய நிலக்கரித்துறை ர‌த்து செய்துள்ளது.மேலும் பல நிறுவனங்க‌ளி‌ன் ஓது‌க்‌‌கீடுகளை ர‌‌த்து செ‌ய்ய‌ப்படல‌ா‌ம் எ‌ன்று தெர‌ி‌கிறது.

2004- 2009ஆம் ஆண்டு வரை நிலக்கரிசுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும்ரூ.1.86 லட்சம் கோடி மத்திய அரசுக்குவருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்தியதணிக்கைத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது.

இது தொடர்பாக நிலக்கரித்துறை கூடுதல் செயலாளர் சோரா சாட்டர்ஜிதலைமையில் உயர்மட்டக் குழு, பணியைத் தொடங்காத 58 சுரங்கங்களின்ஒப்பந்தங்களை ரத்து செ‌ய்து பற்றி கடந்த இரண்டு நாட்களாக ஆராய்ந்து வந்தது.

இதனையடுத்து ஜெ.எஸ். டபிள்யூ ஸ்டீல் மற்றும் எம்டா ஹிமாச்சல் ஆகிய நிறுவனங்களின் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் இதர நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும்ஆய்வு செய்து வரும் 17ஆ‌ம் தேதி அறிக்கையை சமர்பிக்க உள்ளது.

அதன்பின் மேலும் சில நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post