Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொழிற்கல்வி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் ஊக்கத்தொகை உயர்வு!

தொழிற்படிப்பு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உயர்வு!
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை இந்த கல்வி ஆண்டு முதல் ரூ 500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ 140ம், ஆதி திராவிட மாணவர்களுக்கு ரூ 150, பழங்குடியினர் மற்றும் பர்மா, இலங்கை, வியட்நாம் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு ரூ 175, பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ 50 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ 100 வழங்கப்படுகிறது. அதிக அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவி தொகையை 2012,13 கல்வியாண்டு முதல் வருமான உச்சவரம்பு மற்றும் இன வேறுபாடின்றி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக ரூ 500 உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதற்காக கூடுதலாக ரூ 12 கோடியே 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை பெறும் மாணவர்க ளின் கணினி தொடர்பான திறனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். இதற்காக ரூ 3 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், இந்த நிதியாண்டில் 3,476 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post