Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளம்பெண் கைது!

வழக்கமாக ஆண்கள் மட்டுமே செய்து வந்த செயலை இப்போது ஒரு பெண்!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் செல்போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்.கள் வந்தபடி இருந்தன. மர்மமான எண்ணில் இருந்த அந்த எஸ்.எம்.எஸ்.கள் மிகவும் ஆபாச வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. 

சில ஆண்கள் இந்த எஸ்.எம்.எஸ்.களை படித்து விட்டு அமைதியாக இருந்தாலும் வேறு சில ஆண்கள் அந்த எஸ்.எம்.எஸ்.களால் வெறுப்படைந்தனர். பெண்களுக்கும் அடிக்கடி எஸ்.எம்.எஸ்.கள் வந்ததால் பலர் கொதிப்படைந்து போலீசில் புகார் செய்தனர். 

இதனால் ஆபாச எஸ்.எம்.எஸ். புகார் அதிகரித்துக் கொண்டே போனது. இதுபற்றி விசாரணை நடத்த பாலக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜு தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது யார்? என்பது தொடர்பான ரகசிய விசாரணையில் இறங்கினார்கள். 

இந்த அதிரடி விசாரணையில் பாலக்காடு அருகே உள்ள பரளி, தேவசம்பரம்பை சேர்ந்த 20 வயது இளம்பெண்தான் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 செல்போன்கள், 18 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண் கூறியதாவது:- 

நான் வைத்திருந்த சிம்கார்டுகளை வைத்து எனக்கு தெரிந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவேன். ஆபாச எஸ்.எம்.எஸ்.களும் அனுப்புவேன். செல்போனில் பேசும்போது பேசுவது ஆணாக இருந்தால் பெண் குரலிலும், பெண்ணாக இருந்தால் ஆண் குரலிலும் பேசுவேன். பல நேரங்களில் நான் பேசியதால் சில குடும்பங்களில் பிரச்சினையும் வந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post