Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று தனது 14-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது கூகிள்!

இணையத்தின் மறு பெயர்: 'கூகிள்'!
கூகிள் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகிள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை. 1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004ல் நடைபெற்றது.

1998-இல் இதே நாளில் தான் (September 27) கூகிள் ஆரம்பிக்கப்பட்டது. கூகிள் ஆரம்பித்து இன்றுடன் 13-வருடங்கள் முடிவடைந்து, 14-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது. 

முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும்.

2006-இல் இந்நிறுவனம் மவுண்டன் வியு, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.

உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகிள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்தி நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கணினித் தொழில் நுட்பத்தையும், கைபேசி உலகிலும் புதுமையான மாற்றங்களையும், புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தும் கூகிள், இணையத்தில் ஒப்பற்ற புரட்சியாளன் ஆகும். நாமும் கூகிளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வோம்.
[vuukle-powerbar-top]

Recent Post