Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஃபேஸ்புக்கால் மாட்டிக்கொண்ட இத்தாலியைச் சேர்ந்த போலி விமானி!

Catch Me If You Can படத்திலிருந்து ஒரு காட்சி.
இந்த படம்தான் போலி விமானியை உசுப்பேற்றியதாம்!
இத்தாலி நாட்டை சேர்ந்த அன்ட்ரியா சிர்லோ (வயது 32) என்ற பெயரில் ஒருவர் தன்னை விமான கேப்டன் என கூறி வந்தார். அத்துடன் விமானியின் உடை அணிந்து அடையாள அட்டையுடன் அவர் இருக்கும் புகைப்படமும் பேஸ்புக்கில் வெளியானது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவரை கண்காணித்தார்கள். அப்போது போலி விமானியான இவர் பிரபல தனியார் விமானம் ஒன்றில் விமானிகளின் அறைக்குள் அமர்ந்து பயணம் செய்திருப்பதும் கண்டிப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து விமானி உடையில் அங்குள்ள துரின் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். இவருடைய உண்மையான பெயர் குறித்தும், போலியான அவர் எப்படி விமானிகளின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக இத்தாலி போலீசார் தெரிவித்தனர். இந்த பெயரில் யாருக்கும் அனுமதி எதையும் தாங்கள் வழங்கவில்லை என துரின் விமான நிலைய நிர்வாகிகள் கூறி விட்டனர். ஆனால் தனியார் விமான நிறுவனம் இதுபற்றி கருத்து எதையும் இன்னும் தெரிவிக்கவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post