Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள திட்டம் தீட்டுகிறாரா கருணாநிதி?

காங்கிரசுடன் கூட்டணி: இதுவரை கெட்டதே போதும் என்கிறாரோ?
நிலக்கரி ஊழல் விவகாரத்திலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்தும் வாயே திறக்காத கருணாநிதி, தற்போது ஒரு வில்லங்க கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வருவாயைத் திரட்டுகிறோம் என்ற பெயரால் ம‌த்‌திய அரசு இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கின்ற செய‌ல் எ‌ன்று கூ‌றியு‌ள்ள ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி, ரேஷன் சர்க்கரை விலையை உயர்த்துவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் எ‌ன கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ரேஷன் சர்க்கரை விலையை மத்திய அரசு உயர்த்தப் போவதாக ஒரு செய்தி வருகிறது.

அது உண்மையாக இருக்கக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம். ரேஷன் கடைகளில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு வழங்கப்படும் ஒரு கிலோ சர்க்கரையின் தற்போதைய விலை ரூ.13.50. இந்தச் சர்க்கரைக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை முற்றிலும் ரத்து செய்வது என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அதைப் பற்றிய முடிவினை அடுத்து வரும் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால், ரேஷன் சர்க்கரையின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.25.17 என்று உயரக்கூடும் என்று சொல்கிறார்கள். இந்த முடிவு எடுக்கப்பட்டால் ரேஷன் சர்க்கரை விலை மாத்திரமல்ல; வெளிச்சந்தையிலே விற்கப்படுகின்ற சர்க்கரையின் விலையும் தற்போது ஒரு கிலோ 40 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுவது, 55 ரூபாயைத் தாண்டி விற்கப்படக் கூடும்.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு என்றெல்லாம் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடர்ந்து மத்திய அரசு இப்படியொரு முடிவினை எடுக்க நினைத்திருந்தாலும், அதனைத் தவிர்க்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

அதுபோலவே, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியையும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும். வருவாயைத் திரட்டுகிறோம் என்ற பெயரால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கின்ற செயலாகவே இருக்கும் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

அ‌ண்மை‌யி‌‌ல் டீச‌ல் ‌விலை உய‌ர்வு, ‌சி‌ல்லரை வ‌ணிக‌த்‌தி‌ல் அ‌ந்‌‌நிய முதல‌ீடு, சமைய‌ல் எ‌ரிவாயு‌க்கு க‌ட்டு‌ப்பாடு வை‌த்‌த ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌‌ள் நட‌‌த்‌திய முழு அடை‌ப்பு‌க்கு ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஆதரவு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதேபோ‌‌ல், இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சவை ம‌த்‌திய அர‌சி‌ன் முடிவை கடுமையாக எ‌தி‌ர்‌த்தா‌ர் கருணா‌நி‌தி. த‌ற்போது ரேஷ‌னி‌ல் ச‌ர்‌க்கரை ‌விலையை உய‌ர்‌த்த ம‌த்‌திய அரசு முடிவு செ‌ய்‌திரு‌ப்பதையு‌ம் எ‌தி‌ர்‌த்து வரு‌கிறா‌ர்.

அவரின் தற்போதைய குழப்ப நடவடிக்கைகளால், காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அடித்தளம் போடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
[vuukle-powerbar-top]

Recent Post