Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமேசான் நிறுவனத்தின் கின்டில் பையர் ஹெச்டி டாப்ளேட் (Kindle Fire HD Tablet)

அமேசான் நிறுவனத்தின் கின்டில் பையர் ஹெச்டி என்ற டாப்ளேட்டை வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியான கின்டில் பையர் டாப்ளேட்டை விட இது பெரியது. 

அமெரிக்கா கலிபோர்னியா மாநிலம் சண்டா மோனிகா நகரில் நடைபெற்ற நிகழ்வில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெய் பெசோஸ் இந்த டாப்ளேட்டை வெளியிட்டார். 

8.9 அங்குல திரையை கொண்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். மொத்தமாக நான்கு வகையான டாப்ளேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 4G வசதிகொண்ட டாப்ளேட் இந்தியா ரூபாய் படி 27 500 ஆகும். wifi வசதியுடன் இருக்கும் டாப்ளேட்டுக்கு இந்தியா ரூபாய் படி 17 500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர 7 அங்குல திரை கொண்ட இரு கின்டில் பையர் ஹெச்டி டாப்ளேட்டுகள் 12 000 மற்றும் 8 000 ரூபாய்க்கு கிடைக்கும். வரும் நவம்பர் மாதம் இந்த நான்கு டாப்ளேட்டுகலும் சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post