Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் மக்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: மேலும் வலுவடைகிறது போராட்டம்! (நேரடி காட்சிகள்)

கூடங்குளம் மக்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், மற்றும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.




கூடங்குளம் பகுதியில் குழுமி இருக்கும்
போராட்டக்குழுவினரின் ஒரு பகுதி
அப்போது போராட்டக்காரர்கள் கூறினார்கள் "இந்த அரசு மக்களுக்காக இருக்கிறதா? இல்லை அரசுக்காக மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன்வைத்தார்கள். அத்துடன் எங்களின் போராட்டத்திற்கு முதல்வரே ஆதரவு தந்தார். ஆனால் தற்போது அவரை சில அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் தங்களின் போராட்டத்தை தவறாக திசைதிருப்ப பார்க்கிறார்கள் நாங்கள் எப்போதும் வன்முறையை கையில் எடுப்பதில்லை. முடிந்தவரை அகிம்சைமுறையில்தான் போராடுகின்றோம். இனிமேலும் அப்படிதான். 144 தடை உத்தரவு என்பது கூடங்குளம் அணுஉலைஇருக்கும் பகுதிக்கு போட்டிருக்கலாம் ஏன் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போடப்பட்டிருக்கிறது" என்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.

கூடங்குளம், மக்களிடம் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக தெரிகிறது. போராட்டம் தொடரும் என போரட்ட குழு அறிவித்துள்ளது. தற்போது சுமார் 30000 ஆயிரம் மக்கள் போராட்டக்களத்தில் உள்ளார்கள். மக்கள் மேலும், அதிக அளவில் கூடிய வண்ணம் உள்ளனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post