Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.மு., கூட்டணி ஆதரவை விலக்குவாரா முலாயம் சிங்? காங்கிரசுக்கு முற்றுகிறது நெருக்கடி!

வெளியேறுவாரா?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டுள்ள நிலையில் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாதி கட்சி தமது நிலையை இன்று அறிவிக்க உள்ளது.

மமதா பானர்ஜி வெளியேறினாலும் மத்திய அரசுக்கு 22 எம்.பிக்களைக் கொண்ட முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் 21 எம்.பிக்களைக் கொண்ட பகுஜன் சமாஜ்கட்சியும் வெளியில் இருந்து ஆதரவளிக்கின்றன.

இதில் சமாஜ்வாதி கட்சி அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு எதிரான கண்டனக் குரலை தீவிரப்படுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு எதிரான இன்றைய முழு அடைப்பிலும் அக்கட்சி தீவிரமாக பங்கேற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது பற்றிய நிலையை இன்று நடைபெற உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பிக்கள் கூட்டம் முடிவு செய்யும் என்று முலாயம்சிங் அறிவித்திருப்பதால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்ட நிலையில் திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மேற்குவங்கத்தில் அரசியல் குழப்பம் உருவாகி உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் புறக்கணித்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்களால் மத்திய அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதால் டெல்லி அரசியல் வட்டாரங்கள் மிகுந்த பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

[vuukle-powerbar-top]

Recent Post