Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நேபாளத்தில் பறவை மோதி விமான விபத்து: 19 பேர் பலி!

நேபாளத்தில் தொடரும் விமான விபத்துகள்!
நேபாளத்தில் திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் தீப்பிடித்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக வந்த 16 பேர் கொண்ட குழுவினரையும் 3 விமான ஊழியர்களையும் ஏற்றிக்கொண்டு லூக்லா என்ற பகுதிக்கு தனியார் விமான நிறுவனத்தை சேர்ந்த டோர்னியர் விமானம் திரிபுவன் விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தீப்பிடித்து மானாஹரா ஆற்றின் கரையில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 19 பேரும் உயிரிழந்தனர். 

இறந்த பயணிகளில் 7 பேர் பிரிட்டன் நாட்டினர், 5 பேர் சீனர்கள், 4 பேர் நேபாள நாட்டினர். 3 விமான ஊழியர்களும் நேபாளத்தை சேர்ந்தவர்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post