Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆளும் காங்கிரஸ் அரசு கூட்டணிக் கட்சிகளை மதிப்பதே இல்லை: மம்தா பானர்ஜி!

எங்களுக்கு மதிப்பளியுங்கள்: காங்கிரசுக்கு மம்தா வேண்டுகோள்!
மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியினரை மதிப்பதே இல்லை. எந்த விஷயத்திலும் அவர்கள் எங்களை கலந்து ஆலோசிப்பது இல்லை. 

தங்களது அரசு நிலையான அரசு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு உறுதியான, நிலையான அரசு அல்ல. எந்த நேரத்திலும் கவிழலாம். பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் திடீர் தேர்தல் வரலாம். மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. 

மேலும், சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து பாராளுமன்றத்தில் யார் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post