Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"காவல்துறையினர் தாக்கினாலும் திருப்பி தாக்காதீர்கள்": உதயகுமார் மக்களிடம் வேண்டுகோள்!

"காவல்துறையினர் உங்களை தாக்கினாலும், அவர்களை திருப்பி தாக்காதீர்கள்" என கூடங்குள போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம், போராட்டக் குழு  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்  மேலும் கூறும்போது, "இந்தியாவில் அற வழியில் போராடிய காந்தியின் அகிம்சை போராட்டம் வெற்றியடைந்தது போல, நமது போராட்டமும் வெற்றியடையும்" என கூறினார். 

கூடங்குளம் போராட்டத்தில், மக்கள் அமைதியான வழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இடிந்தகரையில் இருந்து, கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக குடும்பத்துடன் வரத்தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள், எந்த விதமான ஆயுதங்களும் எடுத்து வரக்கூடாது எனவும் போராட்டக் குழு  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post