Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய பிரதேசத்தில் வைகோவின் போராட்டம்: அதிகரித்து வரும் உள்ளூர் மக்களின் ஆதரவு!

உண்மைக்கு எப்போதும் ஆதரவு பெருகும்: வைகோவின் போராட்டத்தில் ம.பி., மக்கள்!
இனப்படுகொலையாளி ராஜபக்சேவின் சாஞ்சி வருகையை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக வைகோ தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு உள்ளூர் இளைஞர் மற்றும் மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.

சாஞ்சியில் உள்ள புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக ராஜபக்ஷே வெள்ளியன்று வருகை தர உள்ளார். அவருக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களுடன் மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு வைகோவை எல்லையான சிந்த்வாரா பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் புதன் கிழமையன்று மாலை 4.30 மணியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வைகோ போராடி வருகிறார். இரண்டாவது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடிய வைகோவிற்கு உள்ளூர் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாலை அணிவித்து தாங்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்தனர்.

அவர்களிடையே பேசிய வைகோ, ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து தமிழ் இன மக்கள் மெழுகுவர்த்தியைப் போல தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதை நினைவுபடுத்தும் விதமாகவே சாலையில் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். தங்களின் போராட்டத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளையும், சிடியையும் இந்தியில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டது. இதனை பார்த்த உள்ளூர் இளைஞர்கள் வைகோவுடன் தாங்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post