Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீர் கோரும் தமிழக அரசின் மனு: விசாரணை நாள் இன்று தெரியும்!


காவிரி நீர் கோரும் தமிழக அரசின் மனு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் இந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை நிராகரித்த நீதிபதிகள், தமிழக அரசின் புதிய மனு மீதான விசாரணை நடைபெறும் தேதி குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தனர்.

காவிரியில் சம்பா சாகுபடிக்காக தமிழகத்துக்கு 48 டி.எம்.சி. நீரை உடனே திறந்துவிடக் கோரும் தமிழக அரசின் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக இந்த மனு மீது உடனே விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது.

காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படியும் தமிழகத்துக்கு காவிரியில் நீரைத் திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

காவிரியில் ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. நீர் வீதம் 24 நாட்களுக்கு 48 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை.

கர்நாடகத்தின் பிடிவாதம் தொடர்வதால் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் 48 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. எனவே, தமிழக அரசின் மனு விசாரிக்கப்படும் நாள் இன்று உறுதி செய்யப்படும்.
[vuukle-powerbar-top]

Recent Post