Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரணாப் முகர்ஜி திருப்பதியில் சாமி தரிசனம்!


சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வந்தார். விழா முடிந்த உடன் அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். 

விமான நிலையத்தில் அவரை கவர்னர் ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முப்படையின் தலைவர்கள், அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். நேற்று இரவே ஆந்திரா சென்று கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த அவர், இன்று காலை திருப்பதி கோவிலுக்குச் சென்றார்.

அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் முழு மரியாதை அளித்து வரவேற்றனர். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு, கோவில் விதிப்படி அளிக்க வேண்டிய, மரியாதைகள், வரவேற்புகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் கோவில் கருவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். 

கோவில் குருக்கள் பிரணாப் முகர்ஜிக்கு பட்டு அங்கவஸ்திரம் புனித நீர் லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினார். கோவிலில் பிரணாப் முகர்ஜி அரை மணி நேரம் வரை இருந்தார். அவருடன் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் பாபிராஜு ஆகியோர் சென்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post