Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தனியார் மருந்து ஆலையில் இராசாயன கசிவு: தொழிலாளர்கள் மயக்கம்!


தனியார் மருந்து தொழிற்சாலையில், ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதில், ஒன்பது பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். புதுச்சேரி, மூலக்குளம் அருகே உள்ள, பிச்சவீரன்பேட்டில், டாக்டர் மில்டன் லேபரட்டரிஸ் என்ற, தனியார் மருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெண் தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தனர். அப்போது, ஸ்டோர் அறையில், மெத்தலைன் குளோரைடு இருந்த மூட்டை கீழே விழுந்துள்ளது. அதிலிருந்து, மெத்தலைன் குளோரைடு வாயு கசிந்தது. இதனால், ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். இருப்பினும், ஒன்பது பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை கம்பெனி நிர்வாகம் மீட்டு, வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார், மருந்து கம்பெனி நிர்வாகத்தின் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post