Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாகிஸ்தான் வெளிநாட்டு தூதரகம் முன்பு முஸ்லிம்கள் போராட்டம்: வன்முறை வெடித்ததால் கடும் பதற்றம்!

வெடித்தது வன்முறை: போர்க்களமாக காட்சியளிக்கிறது இஸ்லாமாபாத்!
முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை அனுமதித்த அமெரிக்காவைக் கண்டித்தும் பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்தியாவில் முழுவதும் கடும் போராட்டம் வெடித்தது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தானிலும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள பகுதியில் போராட்டம் நடந்தது. மாணவர் அமைப்பினைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்த இப்போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. 

வெளிநாட்டு தூதரக குடியிருப்பில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அதேசமயம் ராவல்பிண்டியில் இருந்து பேரணியாக வந்த இஸ்லாமியை அமைப்பினர் இஸ்லாமாபாத்துக்கு வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்கரர்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். கற்களை வீசி தாக்கியதால் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

இருப்பினும் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 9 போலீஸ்காரர்கள் மற்றும் 6 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், போலீஸ் சோதனை சாவடிகளுக்கு தீ வைத்தனர். 

இதையடுத்து போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post