Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாளை முழு அடைப்பு என்றாலும் பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசின் அறிவிப்புக்கு என்ன காரணம்?

முழு அடைப்பு போராட்டம்: எப்படி நடந்தாலும்
ஆளும் ஐ.மு.,கூட்டணிக்கு சாதகம் தான்.

நாடு முழுவது‌ம் நாளை முழு அடைப்பு நடைபெற உ‌ள்ள ‌நில‌ை‌யி‌ல் தமிழக‌த்‌தி‌ல் அனைத்து பள்ளிக்கூடங்களும் வழக்கம்போல செயல்படும் என்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததை கண்டித்தும் அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அன்று பள்ளிக்கூடம் நடத்தப்படுமா என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா கூறுகை‌யி‌ல், முழு அடைப்பு நடைபெறும் 20ஆ‌ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பு பள்ளிகளும் நடைபெறும்.

அதாவது அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்பட அனைத்துதரப்பு பள்ளிகளும் வழக்கம்போல திறக்கப்பட்டு நடைபெறும்.

ஏற்கனவே காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த தேர்வுகளும் அறிவிக்கப்பட்டபடி சரியாக நடைபெறும். இதில் எந்த வித மாற்றமும் இல்லைஎ‌ன்று சபீதா தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்திற்கு அரசின் ஆதரவு இருக்கும் என்றும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படும் என்று தான் முதலில் எண்ணப்பட்டது. இந்நிலையில், தி,மு.க வும் போராட்டத்தில் பங்கு பெரும் என கருணாநிதி அறிவித்ததால், அரசின் முடிவு மாற்றப்பட்டிருக்கும். அரசின் பங்களிப்பு இல்லாததால், போராட்டம் தோல்வியுற்று, ஆளும் ஐ.மு., கூட்டணி மற்றும் தி.மு.கவுக்கு சாதகமாகவே அமையும் என்பது தான் உண்மை.


[vuukle-powerbar-top]

Recent Post