Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை டி-20 உலக கோப்பை பரபரப்பு: ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்த மர்ம மனிதர்!

வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கொழும்பு சினமன் கிராண்ட் (Cinnamon Grant) விடுதியில் தங்கி இருந்த அறைகளில் ஒன்றுக்குள் மர்ம மனிதர் ஒருவர் புகுந்தமையால் அச்சம் கலந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ட்வென்டி- 20 உலக கோப்பை சுற்றுப் போட்டியில் பங்கேற்கின்றமைக்காக இவ்வீரர்கள் வந்து உள்ளார்கள். இவர்கள் விடுதியின் இரு அறைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் மர்ம மனிதர் ஒருவர் அறைகளில் ஒன்றுக்குள் புகுந்து இருக்கின்றார். மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா? என்று வீரர்களை கேட்டு இருக்கின்றார்.

இவ்விடயம் விடுதியின் பாதுகாப்பு மேற்பார்வையாளரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. காவல் துறையை வரவழைத்தார் மேற்பார்வையாளர்.

இம்மனிதரை காவலர்கள் பிடித்துச் சென்று உள்ளனர். ஏதேனும் தீங்கை ஏற்படுத்துகின்றமைக்காக அல்லது  கிரிக்கெட் சூதாட்டம் மேற்கொள்கின்றமைக்காக இம்மனிதர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் அறைக்குள் புகுந்து இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் காவல்துறை புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post