Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக மீனவர் இலங்கை சிறையில் உயிரிழப்பு: கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல்!

நாம் மீன்களுக்கு வலை வீச,  இலங்கை நம் மீனவர்களுக்கு வலை வீசுகிறது!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் இன்று காலை சித்திரவதையினால் முறையான மருத்துவ வசதி இன்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடலில் காயங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தினார் என்ற பொய் குற்றச்சாட்டில் இலங்கைக் கடல் எல்லையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ஐவரில் ஒருவரே மேற்படி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உயிரிழந்தவர் தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீலங்கா சிறைகளில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை எனக் கூறியமை நினைவிருக்கலாம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை இந்திய பிரதமரிடம் கூறினார். ஆனால், சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் இராஜபக்ஷேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

[vuukle-powerbar-top]

Recent Post