Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக வாகனங்கள் கர்நாடக எல்லையில் நிறுத்தம்: கடும் பதற்றம் நிலவுகிறது!

தண்ணீர் கொடுக்காதீர்கள் என ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்!
இன்று காலை கர்நாடகம் செல்லும் தமிழகப் பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களும், தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பண்ணாரி எல்லையில் போலீசாரால் இந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழக – கர்நாடக எல்லையில் தமிழகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இப்படியாக அங்கு போராட்டங்கள் நடைபெறும் நிலையில், இன்று காலை முதல் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி எல்லை வழியாக கர்நாடகம் செல்லக் கூடிய அனைத்து தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் ஏதேனும் நடந்துவிடக் கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பண்ணாரி எல்லையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அங்கு பதற்றமான நிலைமை காணப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post