Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெண்களை கண்களாக மதிக்கிறது தமிழ்நாடு: தேசிய குடும்ப நல அமைச்சகம் தகவல்!

பெண்களின் சுதந்திரம்: நாட்டின் நலம்!
தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தமிழ் நாட்டில் மட்டுமே பெண்கள் சுதந்திரமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்ப பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது, அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் நாட்டிலேய மேற்கு வங்காளமும், ராஜஸ்தான் மாநிலமும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது.

குடிநீர் பிடிப்பற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.

அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும்பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது.

கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரை பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமுதாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வியறவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம்மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது.

தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது. ஆனால் இந்தியாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலைசிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது.

தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந்திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post