Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா., கொண்டு செல்கிறார் ஸ்டாலின்!

அமெரிக்கா செல்கிறார் ஸ்டாலின்!
இலங்கை விவகாரம் தொடர்பில் டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று நியூயோர்க் செல்லவுள்ளது.

தற்போது தி.மு.க சார்பில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் கொடுக்க இந்திய மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது.

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நாசபையில் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் ஒக்டோபர் 6ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளனர். அங்கு ஐ.நா.சபையில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை அவர்கள் கையளிக்கவுள்ளனர் என்று மேலும் குறிப்பிடப்படுகின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post