Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒலி அமைப்பில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளியாகவிருக்கும் 'விஸ்வரூபம்'!

யாரென்று புரிகிறதா? இவன் தீ என்று தெரிகிறதா?
விஸ்வரூபம்: புதிய 11.1 ஒலிநுட்பம்
கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் Dolby தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார்.

இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு ‘விஸ்வரூபம்’. இப்படத்தினை PVP சினிமாஸ் வெளியிட இருக்கிறது.

அக்டோபர் 12ம் தேதி ‘விஸ்வரூபம்’ வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின் ‘மாற்றான்’ மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின.

இந்நிலையில் ‘விஸ்வரூபம்’ படத்தை 2013-ற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வதற்காக வந்து இருக்கிறார். இதுவரை George Lucasன் ‘Red Tail’ என்கிற திரைப்படம் மட்டுமே Auro 3D தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கிறது. Auro 3Dல் முதல் இந்திய படமாக ‘விஸ்வரூபம்’ அமைய இருக்கிறது.

Auro 3D என்பது ஒலியில் 3D வகை சார்ந்ததாகும். ‘விஸ்வரூபம்’ படத்தில் நிறைய ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தினை தேர்வு செய்து இருக்கிறாராம் கமல்.

கமல் சென்னையில் 20 திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி இந்த தொழில்நுட்பத்தினை அமல்படுத்த கூறி இருக்கிறாராம். ஒலியில் புதுப்பாதை போட இருக்கிறது ‘விஸ்வரூபம்’ !
[vuukle-powerbar-top]

Recent Post