Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெரினாவுக்கு செல்லும் விநாயகர் சிலைகளால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விநாயகரால் போக்குவரத்து நெரிசல்!
சென்னையில் தற்போது நடைபெற்று வரும் விநாயகர் கடல் கரைப்பு ஊர்வலத்தினால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வெவ்வேறு இடங்களில் கடந்த இரு வாரங்களாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க இன்று எடுத்துச் செல்லப்படுகின்றன. 

சென்னையின் வடபழனி-போரூர் முக்கிய சாலையான ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாக நமது செய்தியாளர் கூறுகின்றார்.

ஒரு சில இடங்களில் கொண்டுசெல்லப்படும் 15 அடிக்கும் உயரமான விநாயகர் சிலைகளால் மின்கம்பிகள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பிள்ளையார் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட்டாலும், இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சிலைகள் கடலில் கரைக்கப்படும்.


[vuukle-powerbar-top]

Recent Post