Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகாவில் முற்றும் போராட்டம்: இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விடப்படும் என்கிறார் ஷட்டர்!

கன்னட அமைப்பினர் போராட்டம்!
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை எதிர்த்து, கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக அணையை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூர், மாண்டியா மாவட்டங்களிலும், தமிழக - கர்நாடக எல்லை பகுதியிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 3 தினங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை மீறமுடியாது. 3 நாட்களுக்கு மட்டும்தான் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும். இன்னும் 3 தினங்களில் உச்சநீதிமன்றத்தில்  மறு சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post