Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இஸ்லாம் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: வைகோ கடும் கண்டனம்!

இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானது. இது முஸ்லிம் உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளார். 
ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை என்ற பொழுது பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கிய பல்வேறு அரசியல் கட்சியினர் இவ்விவகாரத்தில் இதுவரை மெளனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு முதன் முதலாக கண்டனம் தெரிவித்துள்ளார் வைகோ.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.
குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறான். தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்த திரைப்படத்தை தயாரித்த குழுவினுடைய பெயர்தான், மனதை வாள்கொண்டு பிளக்கிறது.
காரணம் அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரை ’கிறிஸ்துவுக்கான ஊடகம்’ என்று பெயர் சூட்டிக்கொண்ட கொடுமை ஆகும்.
பாலியல் உறவுகளை பச்சையாக சித்தரிக்கும் ஆலன் ராபர்ட் என்பவன்தான் ‘அப்பாவி இஸ்லாமியர்கள்’ என்ற இப்படத்தை இயக்கி உள்ளான். 

கோடானுகோடி இஸ்லாமியர்களின் உள்ளத்தை மட்டுமல்ல, அண்ணலார் நபிகள் நாயகத்தை போன்றுகின்ற, உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நெஞ்சிலும் நெருப்பை கொட்டிவிட்டது. இந்த படம் அரசின் வெளியீடு அல்ல என்றும், தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் அக்கிரமம் ஆகும்.

இப்படத்தை தயாரித்த கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கழுகுப் புத்தியை மாற்றிக்கொண்டு, இப்போது வந்துள்ள பிரளயத்தை கண்டாவது அறிவும், உணர்வும் பெற்று உடனே அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படத்தை தடை செய்ய வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post