Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலைக்கு எதிரான போராட்டம்: மண்ணில் புதையும் போராட்டத்தில் பங்கேற்றார் வைகோ!

மக்களை மண்ணுக்குள் புதைக்க முயற்சிக்கும் கூடங்குளம்: விடாத போராளிகள்!
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும், அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடற்கரையில் மார்பளவு மணலுக்குள் புதைந்து வைகோ, உதயகுமா‌ர், பு‌ஷ்பராய‌ன் உ‌ள்பட ஆயிரக்கணக்கானோ‌ர் நூதன முறை‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை மீனவ கிராமத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் நேற்று 408வது நாளாக போராட்டம் நடந்தது.

இடிந்தகரையில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை சந்திக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 200 தொண்டர்களுட‌ன் அ‌ங்கு வ‌ந்தா‌ர்.

இடிந்தகரைக்கு கடல் வழியாக படகு மூலம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் மற்றும் கூத்தங்குழி கிராம மீனவர்களும் அங்கு வந்தனர்.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பே‌சிய வைகோ,கூடங்குளம் அணு உலை ஆபத்தானது, எனவே அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. அணுமின் நிலையத்தில் சத்தமின்றி எரிபொருள் நிரப்புவதுடன், போராட்டக்காரர்களை குழப்பிவிட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. மக்களை அறவழியில் போராட விடுங்கள். அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுங்கள். இந்த பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இடிந்தகரை போராட்டத்தில் இறந்த மீனவர் சகாயத்தின் வீட்டுக்கு வைகோ சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடைய குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

‌பி‌‌ன்ன‌ர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும், அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடற்கரையில் மார்பளவு மணலுக்குள் புதைந்து வைகோ, உதயகுமா‌ர், பு‌ஷ்பராய‌ன் உ‌ள்பட ஆயிரக்கண‌க்கானோ‌ர் நூதன முறை‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.
[vuukle-powerbar-top]

Recent Post