Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ம.பி.,யில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் வைகோ: உற்சாக வரவேற்பு ஏற்பாடு!

அறப்போராட்டம் முடித்து சென்னை திரும்புகிறார் வைகோ!
மதிமுக அமைப்பு செயலாளர் சீமா பஷீர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ராஜபக்சேவுக்கு எதிரான கருப்பு கொடி அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் 21 பஸ்களில் கடந்த 17ம் தேதி சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் மத்திய பிரேதச மாநில எல்லையில் கடந்த 19ம் தேதி மாலை 4 மணி அளவில் வைகோ உட்பட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

சாஞ்சியில் அறப்போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க கோரி சாலை ஓரத்திலேயே 19ம் தேதி முதல் 21ம் தேதி மணி வரை ஜனநாயக முறையில் அறப்போராட்டத்தில் வைகோ தலைமையில் ஈடுபட்டனர். இந்நிலையில் 21ம் தேதி காலை 11 மணி அளவில் தடையை மீறியதால், அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின், மாலையில் விடுதலை செய்தனர். தற்போது வைகோ உட்பட அனைவரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் 23ம் தேதி (இன்று) காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். வைகோ மற்றும் அவரது சகாக்களை வரவேற்க கட்சி கொடி ஏந்தி அணி அணியாக திரண்டு வர வேண்டுகிறேன்".

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post